வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.
vittum iTalvENTum kollO viruntOmpimissil misaivAn pulam
Balabharthy
பொருள் / உரை
முருகா எளிய உரை
விருந்தினர் முதலில் உணவளிப்பான்!மிஞ்சியிருக்கும் உணவைத் தானும் உண்பான்!வித்திடாமல் பயிர் தழைத்து வளரும்!அவன்தன் நிலத்தில் வித்திட வேண்டுமோ?
• விருந்தோம்பி = விருந்தினருக்கு முதலில் உணவளித்துப் போற்றி,• மிச்சில் மிசைவான் = எஞ்சிய உணவைத் தான் உண்ணும் நல்லவனின்• புலம் = விளைநிலத்தில்,• வித்தும் இடல் வேண்டும் கொல்லோ = விதையை விதைக்கவும் வேண்டுமோ? (விதைக்காமலேயே பயிர்கள் செழித்து விளையும்).
Murugaa simple commentary
He will feed guests first!He himself will eat the remaining food!Crops will flourish and grow without sowing!Is it necessary to sow seed in his land?
• Hosting guests = Having first fed and cherished guests,• One who eats remnants = Of the good person who himself eats the remaining food• Field = In the cultivable land,• Is it necessary to sow seed = Is it necessary to sow seed? (Crops will flourish and grow even without sowing).
Machine translation from the Tamil
மு.வரதராசன்
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
பரிமேலழகர்
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
Parimelazhagar
The field of one who cherishes guests and eats the remainder, for the arable land of one who first feeds the guests and afterward eats what is left over himself; is it even necessary to sow seeds, is sowing seeds even necessary? It is not necessary. ('Kol' is a metrical expletive. 'It will grow by itself' is an implied ellipsis. By these three verses, the benefit attained in this birth by those who cherish guests has been stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
Meaning in English
Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise

