Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 84

அறத்துப்பால்இல்லறவியல்9. விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.

akanamarntu seyyAL uRaiyum mukanamarntunalvirun tOmpuvAn il

SPR Prime Media

பொருள் / உரை

முருகா எளிய உரை

முகமலர்ந்து நல்விருந்தை போற்றுவான்!இல்லிலே திருமகள் மகிழ்ந்து வாழ்வாள்!என்றும் மனமகிழ்ந்தே குடியிருப்பாள்!திருமகள்தான் அங்கே குடியிருப்பாள்!

• முகன் அமர்ந்து = மலர்ந்த இன்முகத்தோடு• நல்விருந்து ஓம்புவான் இல் = நல்ல விருந்தினரை உபசரிப்பவனின் வீட்டில்,• செய்யாள் = செல்வத் திருமகளானவள் (மகாலட்சுமி)• அகன் அமர்ந்து = மனம் மகிழ்ந்து• உறையும் = நிலையாகக் குடியிருப்பாள்.

மு.வரதராசன்

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

பரிமேலழகர்

செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Meaning in English

With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout