Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 83

அறத்துப்பால்இல்லறவியல்9. விருந்தோம்பல்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.

varuviruntu vaikalum OmpuvAn vAzhkkaiparuvantu pAzhpaTutal inRu

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

தினந்தோறும் விருந்தினரைப் போற்றுவான்!உபசரித்து இல்வாழ்க்கை நடத்துவான்!வறுமையினால் ஒருநாளும் வருந்தான்!கெட்டுப் பாழாகியே ஒருநாளும் போகான்!

• வருவிருந்து = தன்னை நாடி வரும் புதிய விருந்தினர்களை• வைகலும் = நாள்தோறும்• ஓம்புவான் = உபசரித்துப் போற்றும் ஒருவனின்• வாழ்க்கை = இல்லற வாழ்க்கையானது,• பருவந்து = வறுமைத் துன்பத்தால் வருந்தி• பாழ்படுதல் இன்று = கெட்டுப் பாழாகிப் போவதில்லை.

மு.வரதராசன்

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

பரிமேலழகர்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Meaning in English

Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout