Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 877

பொருட்பால்அங்கவியல்88. பகைத்திறந்தெரிதல்

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.

nOvaRka nonta taRiyArkku mEvaRkamenmai pakaivar akattu

V. Sadagopan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் துன்பத்தைத் தாமாக உணராதவர்களிடம் போய்த் தன் துயரத்தைச் சொல்லிக் கலங்கக் கூடாது; அதேபோல், தன்னை வீழ்த்தக் காத்திருக்கும் பகைவரிடத்தில் தன் பலவீனத்தையோ தளர்ச்சியையோ ஒருபோதும் காட்டக் கூடாது.

• நொந்தது அறியார்க்கு நோவற்க = துன்பத்தை உணராதவரிடம் சொல்லிப் புலம்பாதே,• மேவற்க மென்மை பகைவர் அகத்து = பகைவரிடம் உன் பலவீனத்தை ஒருபோதும் காட்டாதே.

மு.வரதராசன்

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

பரிமேலழகர்

நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

Meaning in English

To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities disclose

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout