Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 876

பொருட்பால்அங்கவியல்88. பகைத்திறந்தெரிதல்

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.

tERinun tERA viTinum azhivinkaNtERAn pakAan viTal

Manya Ayodhiramanujan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவரைப் பற்றி முன்பே ஆராய்ந்து நம்பியிருந்தாலும் நம்பாவிட்டாலும், தனக்கு ஒரு துன்பமும் நெருக்கடியும் வந்த காலத்தில், அவரை அளவுக்கு மீறி நம்பிக் கூடாமலும் பகைத்து விலக்காமலும் நடுநிலையாக விட்டு வைக்க வேண்டும்.

• தேறினும் தேறாவிடினும் = ஒருவரை முன்பே நம்பியிருந்தாலும் இல்லாவிட்டாலும்,• அழிவின்கண் தேறான் பகாஅன் விடல் = நெருக்கடிக் காலத்தில் அவரைச் சேர்க்காமலும் விலக்காமலும் நடுநிலையாக வைக்க வேண்டும்.

மு.வரதராசன்

இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

பரிமேலழகர்

தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

Meaning in English

Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout