Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 874

பொருட்பால்அங்கவியல்88. பகைத்திறந்தெரிதல்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.

pakainaTpAk koNTozhukum paNpuTai yALantakaimaikkaN tangkiR Rulaku

Karthiga

பொருள் / உரை

முருகா எளிய உரை

பகைமையையும் தனக்கு நல்நட்பாக மாற்றிக்கொண்டு நல்லுறவோடு வாழும் உயர்ந்த பண்பாளனின் பெருந்தன்மைக்குள் இந்த உலகமே நிலைபெற்று வாழ்கிறது.

• பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் = பகையை நட்பாக்கிப் பழகும் பண்பாளனின்,• தகைமைக்கண் தங்கிற்றுலகு = பெருந்தன்மைக்குள் இவ்வுலகமே நிலைபெறுகிறது.

மு.வரதராசன்

பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

பரிமேலழகர்

பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.)

சாலமன் பாப்பையா

பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

Meaning in English

The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friends

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout