ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.
EmuR Ravarinum Ezhai tamiyanAyppallAr pakaikoL pavan
Sreekrishnan Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சுற்றமும் துணையுமின்றித் தான் தனியாக நின்றுகொண்டு, பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்த பைத்தியக்காரர்களை விடவும் அறிவற்ற பெரும் மூடனாவான்.
• தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன் = துணையற்றுத் தனித்து நின்று பலரைப் பகைப்பவன்,• ஏமுற்றவரினும் ஏழை = பித்துப் பிடித்தாரை விடவும் அறிவிலியாவான்.
மு.வரதராசன்
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
பரிமேலழகர்
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார்.தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
Meaning in English
Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn





