Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 872

பொருட்பால்அங்கவியல்88. பகைத்திறந்தெரிதல்

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.

villEr uzhavar pakaikoLinum koLLaRkasollEr uzhavar pakai

Avyukth Sunilkumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• வில்லேர் உழவர் பகைகொளினும் = வில்லை ஏராகக் கொண்ட வீரரோடு பகைத்தாலும்,• கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை = சொல்லை ஏராகக் கொண்ட அறிஞரோடு ஒருபோதும் பகை கொள்ளாதே.எளிய விளக்கம்:வில்லை ஏராகக் கொண்டு போரிடும் ஆயுத வீரர்களோடு பகை கொண்டாலும்கூடத் தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் நுண்ணிய அறிவும் சொல்லாற்றலும் கொண்ட அறிஞர்களோடு ஒருபோதும் பகைமை கொள்ளக் கூடாது.

மு.வரதராசன்

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

பரிமேலழகர்

வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)

சாலமன் பாப்பையா

விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

Meaning in English

Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout