பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
pakaiyennum paNpi latanai oruvannakaiyEyum vENTaRpAR RanRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகை என்று சொல்லப்படும் நற்பண்பற்ற கொடிய தீமையை, ஒருவன் வேடிக்கைக்காகவோ பொழுதுபோக்கு விளையாட்டாகவோகூட மனதில் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடாது.
• பகைஎன்னும் பண்பிலதனை = பகை எனப்படும் நற்குணமற்ற கொடிய தீமையை,• ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்றன்று = ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பக் கூடாது.
Murugaa simple commentary
One should not, even for fun or as a pastime game, desire and accept in the mind the cruel evil devoid of good character called enmity.
• That devoid of good character called enmity = the cruel evil lacking good character called enmity,• One should not desire even in jest = one should not desire even as a game.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
பரிமேலழகர்
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
Parimelazhagar
That which is devoid of good quality called enmity, that which yields evil, which is called enmity; is not of a nature to be desired by anyone even in jest, for anyone to desire it even in play is not of a proper nature. (Because making ignoble enmity for oneself yields only evil in every way, he said 'devoid of good quality', and because even if one desires it in play, only hatred is produced and it becomes real, he said 'even in jest', and meaning that not desiring it is the determination of the ancients, he spoke attributing it to the books of right conduct. That noun was supplied by expectancy.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
Meaning in English
For Hate, that ill-conditioned thing not e'en in jest Let any evil longing rule your breast

