Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 870

பொருட்பால்அங்கவியல்87. பகைமாட்சி

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.

kallAn vekuLum siRuporuL enjnjAnRumollAnai ollA toLi

Jyothsna Krishnaraj & Radhika Krishnaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

நீதிநெறி கல்லாத அறிவிலியைப் பகைத்து வெல்வது மிக எளிய செயலாகும்; அத்தகைய எளிய வெற்றியைக்கூட ஈட்டத் துணியாத ஒருவனிடம் எக்காலத்திலும் வீரப் புகழ் வந்து பொருந்தாது.

• கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை = கல்லாத அறிவிலியை வெல்லும் எளிய செயலைச் செய்யாதவனை,• எஞ்ஞான்றும் ஒல்லாதொளி = எக்காலத்திலும் வீரப் புகழ் வந்து சேராது.

மு.வரதராசன்

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

பரிமேலழகர்

கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

Meaning in English

The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never more

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout