Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 868

பொருட்பால்அங்கவியல்87. பகைமாட்சி

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குஇனனிலனாம் ஏமாப் புடைத்து.

kuNanilanAyk kuRRam palavAyin mARRArkkinanilanAm EmAp puTaittu

Sindhu Vasudevan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் நற்குணம் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையவனாக இருந்தால் அவனுக்குத் துணையிருக்காது; அவன் அவ்வாறு துணையற்று நிற்பதே அவனுடைய பகைவர்களுக்குப் பெரும் பலமாகவும் வெற்றியாகவும் அமைந்துவிடும்.

• குணனிலனாய்க் குற்றம் பலவாயின் = நற்குணமின்றிப் பல குற்றங்கள் உடையவனானால்,• இனனிலனாம் மாற்றார்க்கு ஏமாப்புடைத்து = அவனுக்குத் துணையிராது; அதுவே பகைவர்க்குப் பெரும் பலமாகும்.

மு.வரதராசன்

ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

பரிமேலழகர்

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)

சாலமன் பாப்பையா

நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

Meaning in English

No gracious gifts he owns, faults many cloud his fame; His foes rejoice, for none with kindred claim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout