Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 867

பொருட்பால்அங்கவியல்87. பகைமாட்சி

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை.

koTuttung koLalvENTum manRa aTuttiruntumANAta seyvAn pakai

Shyam Rakesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• அடுத்திருந்து மாணாத செய்வான் பகை = கூடவே இருந்து தகாதவற்றைச் செய்பவனின் பகையை,• கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற = பொருளைக் கொடுத்தாவது உறுதியாக அவனோடு பகைகொண்டு பிரிக்க வேண்டும்.எளிய விளக்கம்:தன்னோடு கூடவே இருந்து கொண்டு செயல்களுக்குப் பொருந்தாத தவறானவற்றைச் செய்யும் துரோகியின் பகையை, சிறிது பொருளை இழக்க நேரிட்டாலும் உறுதியாக அவனோடு வெளிப்படையாகப் பகைகொண்டு பிரித்துவிட வேண்டும்.

மு.வரதராசன்

தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

Meaning in English

Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: His hate- 'tis cheap at any price- be sure to buy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout