Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 866

பொருட்பால்அங்கவியல்87. பகைமாட்சி

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்.

kANAs sinattAn kazhiperung kAmattAnpENAmai pENap paTum

Adhi Gopal

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் = குருட்டுச் சினமும் எல்லையற்ற பேராசையும் கொண்டவன்,• பேணாமை பேணப்படும் = அவனது பகைமையை அஞ்சாமல் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம்.எளிய விளக்கம்:நன்மை தீமைகளை ஆராயாத குருட்டுத்தனமான சினமும், எல்லையற்ற பேராசையும் காமமும் கொண்ட ஒருவனின் பகையை, எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்பதால் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம்.

மு.வரதராசன்

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

பரிமேலழகர்

காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

Meaning in English

Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout