வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது.
vazhinOkkAn vAyppana seyyAn pazhinOkkAnpaNpilan paRRArk kinitu
J. Sundarapandian
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறவழியை ஆராயாதவனாய், பொருத்தமான நன்மைகளைச் செய்யாதவனாய், பழிக்கு அஞ்சாதவனாய், நற்பண்புகளற்றவனாய் இருக்கும் ஒருவனைப் பகையாக எதிர்கொள்வது, பகைவர்களுக்கு மிக எளிதில் வெற்றி கிட்டும் என்பதால் இனிதாகும்.
• வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் = நல்வழி அறியாதவனாய், தக்கன செய்யாதவனாய், பழிக்கு அஞ்சாதவனாய்,• பண்பிலன் பற்றார்க்கு இனிது = நற்பண்பற்றவனாய் உள்ளவனை எதிர்ப்பது பகைவர்க்கு எளிதும் இனிதுமாகும்.
மு.வரதராசன்
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
பரிமேலழகர்
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
Meaning in English
No way of right he scans, no precepts bind, no crimes affright, No grace of good he owns; such man's his foes' delight





