Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 864

பொருட்பால்அங்கவியல்87. பகைமாட்சி

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.

nIngkAn vekuLi niRaiyilan enjnjAnRumyAngkaNum yArkkum eLitu

Kamalaja Rajagopal

பொருள் / உரை

முருகா எளிய உரை

எப்போதும் கோபத்தை விடாதவனாகவும், மன அடக்கமும் இரகசியங்களைக் காக்கும் தன்மையும் இல்லாதவனாகவும் உள்ள ஒருவனை, எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவரும் மிக எளிதாக வென்றுவிடலாம்.

• நீங்கான் வெகுளி நிறையிலன் = கோபம் தணியாத, மன அடக்கமும் இரகசியமும் காக்காத ஒருவன்,• எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது = எக்காலத்தும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்ல எளியவன்.

மு.வரதராசன்

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

பரிமேலழகர்

வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

Meaning in English

His wrath still blazes, every secret told; each day This man's in every place to every foe an easy prey

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout