அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு.
anjsum aRiyAn amaivilan IkalAntanjsam eLiyan pakaikku
Aishwarya & Vedhika
பொருள் / உரை
முருகா எளிய உரை
அஞ்சத் தேவையில்லாததற்கு அஞ்சும் கோழையாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு இணங்கி வாழாதவனாய், யாருக்கும் எதுவும் தராத கஞ்சனாய் இருக்கும் ஒருவன், பகைவரால் மிக எளிதாக வீழ்த்தப்படுவான்.
• அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் = கோழையாய், அறிவற்றவனாய், இணங்காதவனாய், ஈயாத கஞ்சனாய் உள்ளவன்,• தஞ்சம் எளியன் பகைக்கு = பகைவரால் மிக எளிதில் வெல்லப்படக்கூடிய எளியவனாவான்.
மு.வரதராசன்
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
பரிமேலழகர்
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)
சாலமன் பாப்பையா
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
Meaning in English
A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey





