Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 859

பொருட்பால்அங்கவியல்86. இகல்

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு.

ikalkANAn Akkam varungkAl atanaimikalkANum kETu taraRku

Thanvi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவனுக்கு நன்மையும் உயர்வும் வரும் காலத்தில் பகைமைக்குக் காரணமிருந்தாலும் அவன் மனமாறுபாட்டை நினைக்கமாட்டான்; ஆனால் தனக்குத் தானே கேட்டினைத் தேடிக்கொள்ளும் காலத்திலோ அப்பகையைத் தீவிரமாக வளர்க்கவே எண்ணுவான்.

• ஆக்கம் வருங்கால் இகல்காணான் = நன்மை வரும் காலத்தில் பகைமைக்கான காரணமிருந்தாலும் நினைக்கமாட்டான்,• கேடுதரற்கு அதனை மிகல்காணும் = கேடு தேடிக்கொள்ளும் போதோ அப்பகையைத் தீவிரமாக வளர்ப்பான்.

மு.வரதராசன்

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

பரிமேலழகர்

ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

Meaning in English

Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout