Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 858

பொருட்பால்அங்கவியல்86. இகல்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

ikaliR ketirsAytal Akkam atanaimikalUkkin UkkumAng kETu

Padmaja Sriram

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனமாறுபாடும் பகையுணர்ச்சியும் தோன்றும் போது அதற்கு இடம் தராமல் பணிந்து விலகுவது ஒருவனுக்கு நன்மையும் ஆக்கமும் தரும்; மாறாக அப்பகையை வளர்க்க ஊக்கப்படுத்தினால் பேரழிவு அவனிடம் விரைந்து வந்து சேரும்.

• இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் = பகையுணர்வுக்கு இடம் தராமல் விலகுவது ஒருவனுக்கு ஆக்கமாகும்,• அதனை மிகலூக்கின் கேடு ஊக்குமாம் = அப்பகையை வளர்க்க முயன்றால் பேரழிவு விரைந்து வந்து சேரும்.

மு.வரதராசன்

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

பரிமேலழகர்

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)

சாலமன் பாப்பையா

மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

Meaning in English

'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout