மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.
mikalmEval meypporuL kANAr ikalmEvalinnA aRivi navar
Yathunanthini Ramanathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனமாறுபாட்டையும் பகையுணர்ச்சியையும் விரும்பி ஏற்கும் தீய அறிவுடையவர்கள், ஒருவருக்கு நிலையான வெற்றியையும் நன்மையையும் தரும் உண்மையான அறநெறிகளை உணர மாட்டார்கள்.
• இகல்மேவல் இன்னா அறிவினவர் = பகைமை விரும்பும் தீய அறிவுடையோர்,• மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் = நிலையான வெற்றியைத் தரும் மெய்யான அறநெறியை உணரமாட்டார்.
மு.வரதராசன்
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
பரிமேலழகர்
இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு.வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
Meaning in English
The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity





