இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.
ikalin mikalini tenpavan vAzhkkaitavalum keTalum naNittu
Anandita
பொருள் / உரை
முருகா எளிய உரை
'பிறரிடம் பகைமை கொண்டு மோதி வெல்வதே இன்பமானது' என்று எண்ணி வாழ்பவனுடைய வாழ்க்கை, வறுமையால் சீர்குலைந்து முற்றிலும் அழிந்து போவது மிக விரைவிலேயே நிகழ்ந்துவிடும்.
• இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை = பகைகொண்டு வெல்வதே இன்பமென எண்ணுபவனின் வாழ்வு,• தவலும் கெடலும் நணித்து = தடம்புரண்டு முற்றாக அழிவது மிக விரைவில் நிகழும்.
மு.வரதராசன்
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
பரிமேலழகர்
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
Meaning in English
The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near





