இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு.
ikalAnAm innAta ellAm nakalAnAmnannayam ennum serukku
Priya Pidaparty
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனமாறுபாடு மற்றும் பகைமையினால் மனிதனுக்குத் துன்பமானவை எல்லாமே வந்து சேரும்; ஆனால் பிறரோடு மகிழ்ந்து பழகும் நல்லிணக்க நட்பினாலோ, அறமும் நீதியும் தழுவிய பெருஞ்செல்வமும் மேலான வாழ்வும் உண்டாகும்.
• இகலானாம் இன்னாத எல்லாம் = பகைமையால் துன்பங்கள் எல்லாமே உண்டாகும்,• நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு = நல்லிணக்க நட்பால் அறநெறியாகிய மேன்மை உண்டாகும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
பரிமேலழகர்
இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
Meaning in English
From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow





