Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 853

பொருட்பால்அங்கவியல்86. இகல்

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்.

ikalennum evvanOy nIkkin tavalillAttAvil viLakkam tarum

Neha Girish

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• இகலென்னும் எவ்வநோய் நீக்கின் = மனமாறுபாடு என்னும் துன்ப நோயை ஒருவன் நீக்கிவிட்டால்,• தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் = அது அவனுக்கு ஒருபோதும் அழியாத நிலையான புகழைத் தரும்.எளிய விளக்கம்:மனமாறுபாடு மற்றும் பகையுணர்ச்சி என்னும் துன்ப நோயைத் தன் மனத்திலிருந்து ஒருவன் நீக்கிவிட்டால், அது அவனுக்கு எக்காலத்திலும் கெடாத, அழியாத பெரும் புகழையும் மேன்மையையும் தரும்.

மு.வரதராசன்

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

பரிமேலழகர்

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

Meaning in English

If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout