இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.
inpattuL inpam payakkum ikalennumtunpattuL tunpang keTin
Soumya Sanathanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிய துன்பமான மனமாறுபாடு மற்றும் பகையுணர்ச்சி உள்ளத்திலிருந்து நீங்கிவிடுமானால், அது அவனுக்கு இன்பங்கள் அனைத்திலும் தலைசிறந்த பேரின்பத்தைத் தரும்.
• இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் = கொடிய துன்பமான மனமாறுபாடு ஒருவனிடம் அழிந்துவிட்டால்,• இன்பத்துள் இன்பம் பயக்கும் = அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த பேரின்பத்தைத் தரும்.
மு.வரதராசன்
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
பரிமேலழகர்
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)
சாலமன் பாப்பையா
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
Meaning in English
Joy of joys abundant grows, When malice dies that woe of woes





