Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 852

பொருட்பால்அங்கவியல்86. இகல்

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை.

pakalkarutip paRRA seyinum ikalkarutiinnAsey yAmai talai

Sabesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

நம்மோடு கூடி வாழாமல் பிரிந்து நிற்பதைக் கருதி ஒருவன் வெறுக்கத்தக்க கொடுமைகளைச் செய்தாலும், அவனோடு மனமாறுபாடு கொண்டு பதிலுக்கு அவனுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே மிகச் சிறந்த பண்பாகும்.

• பகல்கருதிப் பற்றா செயினும் = பிரிவை விரும்பி ஒருவன் வெறுக்கத்தக்க தீமைகளைச் செய்தாலும்,• இகல்கருதி இன்னாசெய்யாமை தலை = பகை கொண்டு பதிலுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே சிறந்ததாகும்.

மு.வரதராசன்

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

பரிமேலழகர்

பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.)

சாலமன் பாப்பையா

நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

Meaning in English

Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout