Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 851

பொருட்பால்அங்கவியல்86. இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்.

ikalenpa ellA uyirkkum pakalennumpaNpinmai pArikkum nOy

Murali

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறரோடு கூடி வாழாமல் மனத்தளவில் பிரிந்து வேறுபட்டு நிற்கும் தீய பகையுணர்ச்சியைப் பெருக்கும் கொடிய மனநோயையே பெரியோர்கள் 'இகல்' (மாறுபாடு) என்று கூறுவார்கள்.

• இகலென்ப = இகல் (மனமாறுபாடு) என்பது யாதெனில்,• எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் = எல்லா உயிர்களிடமும் பிரிந்து நிற்கும் தீய பகையை வளர்க்கும் நோயாகும்.

மு.வரதராசன்

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

பரிமேலழகர்

எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

Meaning in English

Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout