Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 849

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.

kANAtAn kATTuvAn tAnkANAn kANAtAnkaNTAnAm tAnkaNTa vARu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்லறிவை அறியாத மூடனுக்கு நல்வழி கற்பிக்க முயற்சிப்பவன், அந்த மூடனால் பழிக்கப்பட்டுத் தானே அறிவில்லாதவனாகத் தோன்றுவான்; மூடனோ தான் புரிந்துகொண்ட தவறான வழியையே சரியான அறிவு என்று இறுமாப்புடன் எண்ணுவான்.

• காணாதான் காட்டுவான் தான்காணான் = மூடனுக்கு அறிவூட்ட முயல்பவன் தானே அறிவற்றவனாய்த் தோன்றுவான்,• காணாதான் தான்கண்டவாறு கண்டானாம் = அந்த மூடனோ தான் கண்ட தவறான வழியையே முழுமையான அறிவாக எண்ணுவான்.

மு.வரதராசன்

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

பரிமேலழகர்

காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்:காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

Meaning in English

That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout