Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 847

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.

arumaRai sOrum aRivilAn seyyumperumiRai tAnE tanakku

Balaji Srivam

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்கள் சொல்லும் பெறுதற்கரிய அருமையான நற்போதனைகளை மனதில் நிறுத்தாமல் அலட்சியமாகக் கைவிடும் மூடன், தனக்குத் தானே தாங்க முடியாத பெரும் துன்பத்தைத் தேடிக்கொள்வான்.

• அருமறை சோரும் அறிவிலான் = அரிய நற்போதனைகளை மனதில் ஏற்காத அறிவிலி,• பெருமிறை தானே தனக்கு செய்யும் = தனக்குத்தானே தாங்க முடியாத பெருந்துன்பத்தைத் தேடிக்கொள்வான்.

மு.வரதராசன்

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

பரிமேலழகர்

அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

Meaning in English

From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout