அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.
aRRa maRaittalO pullaRivu tamvayinkuRRam maRaiyA vazhi
S. Ramya
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னிடம் உள்ள ஒழுக்கக் கேடுகளையும் குற்றங்களையும் உணர்ந்து நீக்காமல் விட்டுவிட்டு, வெறும் ஆடையால் மட்டும் உடம்பை மறைத்துக்கொண்டு நாகரிகவான் என நினைப்பது மூடத்தனமாகும்.
• தம்வயின் குற்றம் மறையாவழி = தம்மிடம் உள்ள ஒழுக்கக் குற்றங்களை நீக்காமல்,• அற்றம் மறைத்தலோ புல்லறிவு = ஆடையால் உடலை மட்டும் மறைப்பது மூடத்தனமாகும்.
மு.வரதராசன்
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
பரிமேலழகர்
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
Meaning in English
Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal





