தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.
tozhutakai yuLLum paTaiyoTungkum onnArazhutakaN NIrum anaittu
Chimmu Jayakumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவர் பயபக்தியோடு கைகூப்பித் தொழுதாலும் அந்தக் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருக்கக்கூடும்; அவர் பரிதாபமாக அழுது சிந்தும் கண்ணீரும்கூட அத்தகைய வஞ்சகச் சதியையே மறைத்திருக்கும்.
• தொழுத கையுள்ளும் படையொடுங்கும் = பகைவர் தொழும் கைகளுக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்,• ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து = அவர் அழுது வடித்த கண்ணீரும் அத்தகைய வஞ்சகமேயாகும்.
மு.வரதராசன்
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
பரிமேலழகர்
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
Meaning in English
In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyes





