இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.
inampOn RinamallAr kENmai makaLirmanampOla vERu paTum
Mithira Sivabalasooriar
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னைச் சேர்ந்த உற்றாரைப் போல நடித்து உண்மையில் உற்றாராக இல்லாதவர்களின் போலி நட்பானது, பொருளை மட்டுமே நாடும் விலைமகளிரின் மனம் போல உள்ளொன்றும் புறமொன்றுமாக மாறித் துரோகம் செய்யும்.
• இனம்போன்று இனமல்லார் கேண்மை = உற்றார் போல் நடித்து உண்மையில் உற்றாராக இல்லாதவரின் நட்பு,• மகளிர் மனம்போல வேறுபடும் = விலைமகளிரின் உள்ளம் போல உள்ளொன்றும் புறமொன்றுமாக மாறுபடும்.
மு.வரதராசன்
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
பரிமேலழகர்
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.
Meaning in English
Friendship of those who seem our kin, but are not really kind Will change from hour to hour like woman's mind





