பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.
palanalla kaRRak kaTaittu mananallarAkutal mANArk karitu
Abishek Raju
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறநூல்கள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்த போதிலும், உள்ளத்தில் வஞ்சகப் பகையுணர்ச்சி கொண்டவர்கள் மனம் திருந்தி உண்மையான நல்ல நண்பர்களாக மாறுவது என்பது ஒருபோதும் இயலாத காரியமாகும்.
• பலநல்ல கற்றக் கடைத்தும் = பல சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும்,• மாணார்க்கு மனம்நல்லர் ஆகுதல் அரிது = உள்ளத்தில் பகையுடையோர் மனம் திருந்தி நல்ல நண்பராவது அரிது.
மு.வரதராசன்
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
பரிமேலழகர்
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
Meaning in English
To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain





