சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.
sIriTang kANin eRitaRkup paTTaTainErA nirantavar naTpu
Abhinand M Nair
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாமல் வெளியே நண்பனைப் போல் பாசாங்கு செய்பவரின் நட்பானது, தக்க சமயம் வரும்வரை தாங்குவது போல் நடித்து, சமயம் வாய்த்ததும் சம்மட்டி அடித்துக் கொல்ல உதவும் கொல்லனின் பட்டடைக் கல்லைப் போன்ற நயவஞ்சகமானதாகும்.
• நேரா நிரந்தவர் நட்பு = உள்ளத்தில் பொருந்தாமல் வெளியே நண்பராய் நடிப்பவரின் நட்பு,• சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை = தக்க சமயம் வரும்போது வெட்டிச் சாய்க்க உதவும் பட்டடை போன்றதாகும்.
மு.வரதராசன்
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
பரிமேலழகர்
நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான்,அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.)
சாலமன் பாப்பையா
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
Meaning in English
Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind





