Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 820

பொருட்பால்அங்கவியல்82. தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.

enaittung kuRukutal Ompal manaikkezhIimanRiR pazhippAr toTarpu

T. S. Ranganathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தனிமையில் வீட்டில் இருக்கும்போது நெருங்கிப் பழகிவிட்டு, பலர் கூடிய பொது அவையில் நயவஞ்சகமாகப் பழித்துப் பேசுவோரின் தீய தொடர்பை, சிறிதளவும் தன்னை அணுகவிடாமல் முற்றிலும் தடுத்து விலக்கிவிட வேண்டும்.

• மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு = வீட்டில் உறவாடிப் பொது மன்றத்தில் பழிப்பவரின் தொடர்பை,• எனைத்தும் குறுகுதல் ஓம்பல் = சிறிதும் தன்னை அணுகவிடாமல் விலக்கிட வேண்டும்.

மு.வரதராசன்

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

பரிமேலழகர்

மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

Meaning in English

In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout