ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.
ollum karumam uTaRRu pavarkENmaisollATAr sOra viTal
Shravan Narayan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை = செய்ய முடிந்த உதவியையும் செய்யாமல் நடிக்கும் கபடரின் நட்பை,• சொல்லாடார் சோர விடல் = அவரிடம் சண்டையிடாமல் மெல்ல நழுவவிட்டு விலக்க வேண்டும்.எளிய விளக்கம்:தம்மால் எளிதில் செய்ய முடிந்த ஒரு உதவியையும் முடியாதது போல் நடித்துக் கெடுப்பவரின் நட்பை, அவரிடம் வெளிப்படையாகச் சண்டையிடாமல், அவருக்கே தெரியாமல் மெல்ல மெல்லக் கைவிட்டு விலகிவிட வேண்டும்.
மு.வரதராசன்
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
பரிமேலழகர்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
Meaning in English
Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew





