Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 817

பொருட்பால்அங்கவியல்82. தீ நட்பு

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.

nakaivakaiya rAkiya naTpin pakaivarAlpattaTutta kOTi uRum

Saravanan Meenakshisundaram

பொருள் / உரை

முருகா எளிய உரை

உள்ளத்தில் மெய்யான அன்பில்லாமல் முகத்தில் மட்டும் சிரித்துப் பேசி ஏமாற்றும் போலி நண்பர்களின் நட்பைக் காட்டிலும், வெளிப்படையான பகைவர்களால் வரக்கூடிய துன்பங்களே பத்துக் கோடி மடங்கு மேலான நன்மைகளைத் தரும்.

• நகைவகையர் ஆகிய நட்பின் = முகத்தில் மட்டும் சிரித்துப் பேசி ஏமாற்றும் போலி நண்பர்களின் நட்பை விட,• பகைவரால் பத்தடுத்த கோடி உறும் = வெளிப்படையான பகைவர்களால் வருவது பத்துக் கோடி மடங்கு நன்மையாகும்.

மு.வரதராசன்

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

பரிமேலழகர்

நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)

சாலமன் பாப்பையா

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

Meaning in English

From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout