Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 816

பொருட்பால்அங்கவியல்82. தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.

pEtai perungkezhIi naTpin aRivuTaiyArEtinmai kOTi uRum

Prarthana Rajkumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவில்லாத ஒருவனுடன் மிகவும் நெருக்கமாகப் பழகும் நட்பைக் காட்டிலும், நற்பண்பும் அறிவும் உடைய சான்றோரிடமிருந்து விலகியிருக்கும் பகையோ தொடர்பின்மையோ கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

• பேதை பெருங்கெழீஇ நட்பின் = அறிவற்றவனுடன் கொள்ளும் நெருங்கிய நட்பை விட,• அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் = அறிவுடையவரின் பகையோ அல்லது தொடர்பின்மையோ கோடி மடங்கு மேலானது.

மு.வரதராசன்

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

பரிமேலழகர்

பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.( 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

Meaning in English

Better ten million times incur the wise man's hate, Than form with foolish men a friendship intimate

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout