உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.
uRuvatu sIrtUkkum naTpum peRuvatukoLvArum kaLvarum nEr
Chitra Mohankumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
நட்பின் மேன்மையைப் பாராமல் தமக்குக் கிடைக்கக்கூடிய சுயநல ஆதாயத்தை மட்டுமே கணக்குப் பார்க்கும் நண்பரும், பொருளை மட்டுமே நாடும் விலைமகளிரும், திருடர்களும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
• உறுவது சீர்தூக்கும் நட்பும் = தமக்குக் கிடைக்கும் ஆதாயத்தைக் கணக்கிடும் நண்பரும்,• பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் = பொருளை மட்டுமே நோக்கும் விலைமகளிரும் திருடர்களும் ஒரே நிகரானவர்கள்.
Murugaa simple commentary
Friends who, without looking at the greatness of friendship, calculate only the selfish gain they can obtain, prostitutes who seek only wealth, and thieves are of the same kind.
• Friendship that weighs what is gained = A friend who calculates the gain that comes to them,• Those who take what is obtained and thieves are equal = Prostitutes who look only at wealth and thieves are equal.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
பரிமேலழகர்
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
Parimelazhagar
Friendship that weighs what is gained, friends who do not look at the measure of friendship but look at the measure of gain that comes from it; those who take what they receive, public women who do not regard the giver but take the price; and thieves, thieves who do not look at the ruin of others but look for their lapse; are equal, are alike among themselves. (Friendship is a metonymy. Since they act deceitfully aiming only at wealth, it means they are equal to courtesans and thieves. By these two verses, the evil of the friendship of those who look only for what accrues to themselves has been stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
Meaning in English
These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train

