உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்.
uRinaT TaRinorUum oppilAr kENmaipeRinum izhappinum en
Shriram Sachi
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்கு ஆதாயம் இருக்கும்போது மட்டும் பழகி, ஆதாயம் இல்லாத போது கைவிட்டு விலகிவிடும் சுயநலவாதிகளின் நட்பைப் பெற்றால் என்ன லாபம் வந்துவிடப் போகிறது? இழந்தால்தான் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது?
• உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை = பயனிருந்தால் கூடி பயனில்லையெனில் விலகும் சுயநலவாதிகளின் நட்பு,• பெறினும் இழப்பினும் என் = கிடைத்தால்தான் என்ன? இழந்தால்தான் என்ன?
Murugaa simple commentary
What profit is going to come from gaining the friendship of selfish people who associate only when there is a benefit for themselves and abandon and withdraw when there is no benefit? What loss is going to come from losing it?
• Befriending if there is gain and departing if it ceases, the friendship of those without comparison = The friendship of selfish people who unite if there is a benefit and withdraw if there is no benefit,• What does it matter whether gained or lost = What if it is obtained? What if it is lost?
Machine translation from the Tamil
மு.வரதராசன்
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
பரிமேலழகர்
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
Parimelazhagar
Urin nattu arin oruum oppu ilar kenmai, the friendship of those without harmony, who make friendship when there is benefit to themselves and cease when that is not there; perinum izhappinum en, what is the gain if it is obtained? What is the loss if it is lost? (Since those who look only to what befalls themselves have no harmony with others, he called them 'those without harmony'. It means that towards them, the state of neutrality alone is fitting.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?
Meaning in English
What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail depart

