Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 811

பொருட்பால்அங்கவியல்82. தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.

parukuvAr pOlinum paNpilAr kENmaiperukaliR kunRal initu

M. S. Prashannaa

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்பு மிகுதியால் விழுங்கிவிடுவது போல் நடித்தாலும், நற்பண்புகள் இல்லாத தீயோரின் நட்பானது மேலும் மேலும் வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைந்துபோவதே மிக்க நன்மையைத் தரும்.

• பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை = குடித்து விழுங்குவது போல் நடித்தாலும் நற்பண்பற்றோரின் நட்பு,• பெருகலிற் குன்றல் இனிது = வளர்ந்து பெருகுவதை விடக் குறைந்து ஒழிவதே நன்மையாகும்.

மு.வரதராசன்

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பரிமேலழகர்

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

சாலமன் பாப்பையா

உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

Meaning in English

Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than grow

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout