Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 810

பொருட்பால்அங்கவியல்81. பழைமை

விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்.

vizhaiyAr vizhaiyap paTupa pazhaiyArkaNpaNpin talaippiriyA tAr

Sai Parikshith

பொருள் / உரை

முருகா எளிய உரை

பழைய நண்பர்கள் தவறிழைத்த போதிலும், அவரிடம் தாம் கொண்டுள்ள நற்பண்பும் அன்பும் நீங்காமல் நிலைநிற்பவர்களை, அவர்தம் பகைவர்களும்கூட விரும்பிப் போற்றிப் பாராட்டுவார்கள்.

• பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் = பழைய நண்பர் தவறு செய்தாலும் அன்பு மாறாமல் நிற்பவர்கள்,• விழையார் விழையப் படுப = பரம பகைவராலும் விரும்பிப் போற்றப்படுவார்கள்.

மு.வரதராசன்

(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

பரிமேலழகர்

பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

Meaning in English

Ill-wishers even wish them well, who guard For ancient friends, their wonted kind regard

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout