Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 809

பொருட்பால்அங்கவியல்81. பழைமை

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு.

keTAa vazhivanta kENmaiyAr kENmaiviTAar vizhaiyum ulaku

Sanjana

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்பும் உரிமையும் கெடாமல் நெடுங்காலமாகப் பழகிய பழைய நண்பர்களின் உறவை, சிறு தவறுகளுக்காகக் கைவிடாமல் போற்றிப் பாதுகாப்பவரை, இந்த உலகத்து மக்கள் அனைவரும் விரும்பிப் போற்றுவர்.

• கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை = அன்பு கெடாமல் நெடுங்காலம் பழகிய பழைய நண்பர்களின் நட்பை,• விடாஅர் விழையும் உலகு = சிறு தவறுகளுக்காகக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

மு.வரதராசன்

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

பரிமேலழகர்

கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும். ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

Meaning in English

Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout