Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 808

பொருட்பால்அங்கவியல்81. பழைமை

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்.

kELizhukkang kELAk kezhutakaimai vallArkkunALizhukkam naTTAr seyin

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் நண்பர் செய்த சிறு தவறுகளைப் பிறர் வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத அளவு நட்புரிமை கொண்ட சான்றோருக்கு, அந்த நண்பர் ஏதேனும் தவறு செய்யும் நாள், தன் அன்பின் பெருந்தன்மையை வெளிப்படுத்தக் கிடைத்த இனிய நன்னாளாகும்!

• கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு = நண்பர் செய்த பிழையைப் பிறர் கூறினாலும் கேளாத நட்புரிமை உடையவருக்கு,• நட்டார் இழுக்கம் செயின் நாள் = நண்பர் பிழை செய்யும் நாள் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் நன்னாளாகும்.

மு.வரதராசன்

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

பரிமேலழகர்

கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

Meaning in English

In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout