Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 807

பொருட்பால்அங்கவியல்81. பழைமை

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.

azhivanta seyyinum anpaRAr anpinvazhivanta kENmai yavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

தூய அன்பின் வழியே நெடுங்காலமாகப் பழகி வந்த பழைய நண்பர்கள், தம் தோழர் தமக்கு அழிவை ஏற்படுத்தும் தவறான செயலைச் செய்துவிட்டாலும்கூட, அவர் மீது தாம் வைத்துள்ள அன்பை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

• அன்பின் வழிவந்த கேண்மையவர் = அன்பின் வழியே நெடுங்காலமாகப் பழகிய நண்பர்கள்,• அழிவந்த செய்யினும் அன்பறார் = தம் நண்பர் தமக்கு அழிவு தரும் செயலைச் செய்தாலும் அன்பு குறைய மாட்டார்கள்.

மு.வரதராசன்

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

பரிமேலழகர்

அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

Meaning in English

True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout