எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
ellaikkaN ninRAr tuRavAr telaiviTattumtollaikkaN ninRAr toTarpu
Gayathri Shriram
பொருள் / உரை
முருகா எளிய உரை
நட்பின் வரம்புகளை உணர்ந்து காப்பவர்கள், நெடுங்காலமாகத் தம்மோடு பழகிய பழைய நண்பர்களின் உறவை, அவர்களால் தமக்கு ஏதேனும் பொருள் இழப்போ நட்டமோ நேர்ந்தாலும்கூட ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார்கள்.
• எல்லைக்கண் நின்றார் = நட்பின் வரம்புகளுக்குள் நிலைத்து நிற்கும் சான்றோர்,• தொலைவிடத்தும் துறவார் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு = தமக்கு நட்டம் நேர்ந்தாலும் பழைய நண்பர்களின் நட்பைக் கைவிட மாட்டார்கள்.
மு.வரதராசன்
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
பரிமேலழகர்
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.)
சாலமன் பாப்பையா
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
Meaning in English
Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends





