இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.
iruntOmpi ilvAzhva tellAm viruntOmpivELANmai seytaR poruTTu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
இல்வாழ்வில் இருந்து பொருள் காப்பதுவே!வாழ்வது எல்லாம் ஒரு நோக்கம் கொண்டதே!விருந்தினரை அன்பாய்ப் பேணும் பொருட்டே!உதவி செய்தல் ஒன்றே அந்தப் பொருட்டே!
• இல் இருந்து = இல்லறத்தில் இருந்து• ஓம்பி வாழ்வது எல்லாம் = செல்வங்களைப் பாதுகாத்து வாழ்வதெல்லாம்,• விருந்து ஓம்பி = வரும் விருந்தினர்களை அன்போடு பேணி• வேளாண்மை செய்தற் பொருட்டு = அவர்களுக்கு உதவி (உபகாரம்) செய்வதற்காகவே ஆகும்.
Murugaa simple commentary
Protecting wealth while being in domestic life!All living has a purpose!For the sake of lovingly caring for guests!Helping alone is that purpose!
• Being in the home = being in domestic life• All living while protecting = all living while protecting wealth,• Caring for guests = cherishing incoming guests with love• For the purpose of doing service = is solely for helping (doing a favor to) them.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
பரிமேலழகர்
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)
Parimelazhagar
Living in the home and safeguarding everything, the entire act of staying in the home and protecting wealth without going to the forest with one's wife; is for the sake of cherishing guests and practicing hospitality, for the sake of tending to guests and rendering help to them. (Therefore, it means that if hospitality is not practiced, there is no use for all the painful actions that arise from staying in the home and acquiring wealth.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
Meaning in English
All household cares and course of daily life have this in view Guests to receive with courtesy, and kindly acts to do

