அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.
anpin vazhiya tuyirnilai aஃtilArkkuenputOl pOrtta uTampu
Joshika Hemesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்பின் வழியில் இயங்கும் உடம்பாகும்!உண்மையிலே உயிருள்ள உடம்பாகும்!அன்பு இல்லாத மனிதர்தம் உடம்போ?வெறும் என்பும் தோலும் போர்த்திய பிணமோ?
• உயிர்நிலை = உயிருள்ள உடம்பாக விளங்குவது• அன்பின் வழியது = அன்பு நெறியில் இயங்குவதேயாகும்;• அஃது இலார்க்கு = அந்த அன்பு இல்லாத மனிதர்களுக்கு• உடம்பு = உள்ள உடம்பானது• என்புதோல் போர்த்த = வெறும் எலும்பின் மீது தோலைப் போர்த்தி வைத்துள்ள நடைப்பிணமே ஆகும்.
Murugaa simple commentary
It is a body that operates in the way of love!Truly it is a living body!The body of people without love?Merely a corpse covered with bone and skin?
• Seat of life = existing as a living body• Way of love = operating in the path of love;• For those without it = for people who do not have that love• Body = the body they have• Covered with bone and skin = is merely a walking corpse covered with skin over bare bone.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
பரிமேலழகர்
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
Parimelazhagar
The seat of life is in the way of love, only the body that stands in its way having love as its origin is a body in which life stands; to those without that, the body is bones covered with skin, the bodies existing for those without that love are bones covered with skin; they are not ones in which life stands. (Because domestic virtue is not yielded, they became such. By these four verses, the fault that occurs where there is no love has been stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
Meaning in English
Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within

