Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 79

அறத்துப்பால்இல்லறவியல்8. அன்புடைமை

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

puRattuRup pellAm evanseyyum yAkkaiakattuRup panpi lavarkku

Akash

பொருள் / உரை

முருகா எளிய உரை

கண் கை போன்ற உறுப்பினால் என்ன பயன்?புறச் செல்வங்களால் மட்டும் என்ன பயன்?அன்பிலாதவர்க்கு இவை என்ன பயன்?இவை தாம் இருந்தும் கூட என்ன பயன்?

• யாக்கை = உடம்பின் (அல்லது குடும்ப வாழ்க்கையின்)• அகத்து உறுப்பு = உள்ளுறுப்பாகிய• அன்பு இலவர்க்கு = 'அன்பு' இல்லாதவர்களுக்கு,• புறத்து உறுப்பு எல்லாம் = வெளியே உள்ள கண், கை முதலிய உடல் உறுப்புகளாலும் (மற்றும் புறச் செல்வங்களாலும்)• எவன் செய்யும் = என்ன பயன் உண்டாகும்? (எந்தப் பயனும் இல்லை).

மு.வரதராசன்

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

பரிமேலழகர்

யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்,

சாலமன் பாப்பையா

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

Meaning in English

Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout