Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 802

பொருட்பால்அங்கவியல்81. பழைமை

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குஉப்பாதல் சான்றோர் கடன்.

naTpiR kuRuppuk kezhutakaimai maRRataRkuppAtal sAnROr kaTan

Athira Menon

பொருள் / உரை

முருகா எளிய உரை

நட்பிற்கு மிக முக்கியமான உறுப்பாக விளங்குவது நண்பர்கள் அன்போடு கொள்ளும் உரிமையேயாகும்; நண்பன் எடுத்துக்கொள்ளும் அந்த உரிமைச் செயலை மனமுவந்து ஏற்று மகிழ்வதே பண்புடைய சான்றோரின் கடமையாகும்.

• நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை = நட்பின் முக்கிய உறுப்பு நண்பரின் உரிமைச் செயலாகும்,• மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் = அந்த உரிமைச் செயலை ஏற்று மகிழ்வதே சான்றோரின் கடமையாகும்.

மு.வரதராசன்

நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

பரிமேலழகர்

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.)

சாலமன் பாப்பையா

நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

Meaning in English

Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout