Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 800

பொருட்பால்அங்கவியல்80. நட்பாராய்தல்

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.

maruvuka mAsaRRAr kENmaiyon RIttumaoruvuka oppilAr naTpu

Shamsudeen

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனத்தூய்மையும் நற்பண்புகளும் கொண்ட சான்றோரின் நட்பை விரும்பி ஏற்றுப் போற்ற வேண்டும்; நன்னெறியில்லாத தீயோரின் நட்பை, எதனைக் கொடுத்தாவது அல்லது இழந்தாவது அடியோடு கைவிட்டு விலக வேண்டும்.

• மருவுக மாசற்றார் கேண்மை = குற்றமற்ற சான்றோரின் நட்பை விரும்பித் தழுவிக் கொள்ள வேண்டும்,• ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு = ஒரு பொருளைக் கொடுத்தாவது தீயோரின் நட்பை அடியோடு விலக்க வேண்டும்.

மு.வரதராசன்

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

பரிமேலழகர்

மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

Meaning in English

Cling to the friendship of the spotless one's; whate'er you pay Renounce alliance with the men of evil way

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout