உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
uLLaRka uLLanj siRukuva koLLaRkaallaRkaN ARRaRuppAr naTpu
Pavithra Hariharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மன ஊக்கத்தைக் குறைக்கக்கூடிய தாழ்ந்த செயல்களை மனதால் கூட நினைக்கக் கூடாது; அதுபோலவே தனக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் இடையில் கைவிட்டு ஓடும் சுயநலவாதிகளின் நட்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
• உள்ளற்க உள்ளம் சிறுகுவ = மன ஊக்கத்தைக் குறைக்கும் செயல்களை நினைக்கக் கூடாது,• கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு = துன்பம் வரும்போது கைவிட்டு ஓடுவோரின் நட்பை ஏற்கக் கூடாது.
மு.வரதராசன்
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
பரிமேலழகர்
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
Meaning in English
Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake





